எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம், தனது அதிநவீன ஏர் கம்ப்ரசர், தீர்வுகளை இன்டெக் 2026 கண்காட்சி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது....

கோவை

Jun 5, 2026 - 15:33
Jun 5, 2026 - 15:35
 0  9
எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம், தனது அதிநவீன ஏர் கம்ப்ரசர், தீர்வுகளை இன்டெக் 2026 கண்காட்சி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது....
எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம், தனது அதிநவீன ஏர் கம்ப்ரசர், தீர்வுகளை இன்டெக் 2026 கண்காட்சி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது....

உலகின் முன்னணி காற்றழுத்தக் கம்ப்ரசர் உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ள, எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனம், கோவை கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெறும் 21வது இன்டெக் – சர்வதேச இயந்திரக் கருவிகள் மற்றும் தொழில்துறை வர்த்தகக் கண்காட்சியில் தனது சமீபத்திய கம்ப்ரசர்டு ஏர் டெக்னாலஜிஸ் அன்ட் சொல்யூஷன்ஸை, காட்சிப்படுத்தியுள்ளது. ஜூன் 4ம் தேதி முதல் 8ம் தேதி, வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் சுமார், 70,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கண்காட்சிக்கு பிளாட்டினம் ஸ்பான்சராக இருக்கும் எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனம், தொழில்துறை பயன்பாடுகளில் அதிக செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் ஆற்றல் சேமிப்பை வழங்கும் விரிவான கம்ப்ரெஸ்ட்டு ஏர் அமைப்புகள் மற்றும் துணை உபகரணங்களை காட்சிப்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ் கூறியதாவது,
இன்டெக் 2026 கண்காட்சியில் எங்கள் நிறுவனம் காட்சிப்படுத்தும் தயாரிப்புகள், வாடிக்கையாளர்கள் தங்களது உற்பத்தித் திறனை மேம்படுத்துவதோடு ஆற்றல் பயன்பாடு மற்றும் மொத்த இயக்கச் செலவையும் குறைக்க உதவும் கம்ப்ரெஸ்ட்டு ஏர் தீர்வுகளை உருவாக்குவதில் எங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன. தொழில்துறைகள் அதிக ஆற்றல் திறன், தொழில்துறையில் முன்னணி நம்பகத்தன்மை மற்றும் குறைந்த பராமரிப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் சாதன செயல்திறனைத் தாண்டி, அளவிடக்கூடிய வணிகப் பலன்களை வழங்கும் தீர்வுகளை நோக்கி மாறியுள்ளதாக தெரிவித்தார்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0