கோவை ஆர் எஸ் புரம் பகுதியில், ஜுன் கஃபே எனும் புதிய அங்காடி திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது...

கோவை

May 21, 2026 - 13:24
May 21, 2026 - 13:27
 0  4
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில், ஜுன் கஃபே எனும் புதிய அங்காடி திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது...
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில், ஜுன் கஃபே எனும் புதிய அங்காடி திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது...

கோவையில் உணவு தொழில்நுட்ப துறை பயின்ற மாணவிகளான மேனகாப்ரியா, மற்றும் ஸ்ருதி, ஆகியோர் இணைந்து கோவை ஆர் எஸ் புரம் பகுதியில், ஜுன் கஃபே எனும் புதிய அங்காடியை உருவாக்கியுள்ளனர். இதன் திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.. தொடர்த்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேனகாப்ரியா கூறியதாவது..
உணவு தொழில் நுட்பத்துறையில், பயின்ற தோழிகளான நாங்கள் இருவரும், கல்லூரி படிப்பை முடித்து விட்டு, இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் புதிய தொழில் துவங்கலாம் என நினைத்த பொழுது.. இத்தகைய கஃபே ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதனை உடனடியாக நிறைவேற்றலாம் என்ற முனைப்புடன் துவங்க பட்டது தான் இந்த ஜுன் கஃபே..
இங்கு இளைஞர்கள் விரும்பும் சுவை, மற்றும் சுகாதாரத்திற்க்கு முக்கியத்துவம் அளித்து உணவுகள், கேக்குகள், பாஸ்தாக்கள், மொஜிட்டோஸ், ஹாட் சாக்லேட், ப்ரெளனிஸ், சூப் வகைகள், ஸ்டாட்ர்ஸ், டெக்சார்ட்ஸ், மோக்டைல்ஸ், என பல விதமான உணவுகள் வழங்க பட உள்ளது. முழுக்க முழுக்க சைவ முறையில் தயாரிக்க படுவதால் அனைவரும் விரும்பும் ஒரு உணவுகளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். மேலும் குழந்தைகள் பிறந்தநாள் விழா, நண்பர்களுடனான அரட்டை, சிறிய அளவிலான விழாக்கள் உள்ளிட்டவைகளுக்கு தேவையான இட வசதிகளும் உள்ளது. அத்தகைய விழாக்களுக்கு முன்பதிவு அவசியம் என தெரிவித்தார். சுமார் 40க்கும் மேற்பட்ட இருக்கைகளுடன் கூடிய இந்த அங்காடின் தனித்துவமான, வடிவமைப்பு, இயற்கையுடன் கூடிய சூழல், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட உணவருந்தும் பகுதிகள், என அனைத்திலும் புதுமையை புகுத்தி இன்றைய இளைஞர்கள், முதல் குழந்தைகள், பெரியவர்கள் வரை அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கி வருகின்றதாகவும் தெரிவித்தார் நண்பகல் 12 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் இந்த அங்காடியில் ஒரு முறை சென்று வந்தால், அடிக்கடி செல்ல தூண்டும் வகையில், சுவையும், பராமரிப்பும் இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0