கோவை கண்ணம்பாளையம் பகுதியில் எர்த் ட்ராகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்கள் 7 பேர், கராத்தேவில் கருப்பு பட்டய தேர்வில் வெற்றி பெற்றனர், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது..

கோவை

May 25, 2026 - 15:11
 0  9
கோவை கண்ணம்பாளையம் பகுதியில் எர்த் ட்ராகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்கள் 7 பேர், கராத்தேவில் கருப்பு பட்டய தேர்வில் வெற்றி  பெற்றனர், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது..

கோவை கண்ணம்பாளையம் பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக எர்த் ட்ராகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இதன் தலைமை மாஸ்டராக சென்சாய் நாக சுந்தரம் மாணவ மாணவியர்களுக்கு கராத்தே பயிற்சிகளை வழங்கி வருகின்றார். இங்கு பயிலும் மாணவ மாணவியர்கள் 7 பேரான, அனுஸ்ரீ, விஷ்ணு, அன்பு, ஸ்வஸ்திக்கா, ஷாஜித் வில்சன், மது ரோஷன், பாலசந்திரன் ஆகியோர் கருப்பு பட்டய தேர்ச்சி பெற்றனர். கடந்த ஒரு வார காலமாக நடைபெற்ற பயிற்சியில், பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று இந்த தகுதிக்கு தேர்ச்சி பெற்றனர். அவ்வாறு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ப்ளாக் பெல்ட், மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா கோவை கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள புனித அடைக்கல மாதா மண்டபத்தில், பொதுமக்கள், மற்றும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிஎஸ்ஜி மருத்துவமனையின் பேராசிரியர் மற்றும் கார்டியாலஜி துறை தலைவர் தமிழரசு, ரென்சி தங்கவேலு ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு ப்ளாக் பெல்ட், அதற்கான சான்றிதல்களை வழங்கினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்சாய் நாகசுந்தரம் கூறியதாவது .கோவை கண்ணம்பாளையம் பகுதியில் ப்ளாக் பெல்ட் அவார்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. கடத்த ஒரு வாரம் ஒவ்வொரு பிரிவுகளில் மாணவர்கள் தங்களது திறனை வெளிபடுத்தினர். ப்ளாக் பெல்ட் என்பது சாதாரண ஒரு விஷயம் இல்லை அதற்குக் முழு திறமைகளையும் வெளிபடுத்த வேண்டும் இதனை மாணவர்கள் செய்து அசத்தியுள்ளனர் அதற்குகு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்தார். ஆரம்ப நிலை வெள்ளை பெல்டில் துவங்கி 10 வது நிலையான ப்ளாக் பெல்ட் வழங்க படுகின்றது என்றார். தற்போதய காலத்தில் கராத்தே என்பது அனைவருக்கும் மிக முக்கியம் பெண்களுக்கு தங்களை தற்காத்து கொள்ள மிகவும் அவசியம் என தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1