சேலத்தில் கல்யாண் ஜுவல்லர்ஸ் புதிய தோற்றத்தில் மிகப்பிரமாண்டமான விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்தார் "இளையதிலகம் "பிரபு கணேசன்
சேலம் ஜனவரி 9
இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான கல்யாண் ஜுவல்லர்ஸ் தமிழ்நாட்டின் சேலத்தில் முற்றிலுமாக புதிய தோற்றத்தில் தரம் மேம்படுத்தப்பட்ட தனது விற்பனை நிலையத்தை இன்று அறிமுகப்படுத்தியது. பிரபல திரை நட்சத்திரம் இளைய திலகம்
பிரபுகணேசன் புதுப்பொலிவுடன் பிரம்மாண்டமாக இருக்கும் விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்தார். சேலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கல்யாண் ஜூவல்லர்ஸ் விற்பனையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நவீன மயமாக்கப்பட்ட விற்பனை நிலையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் பிரபுணேசன் பேசுகையில் புதுப்பொலிவுடன் நவீன வசதிகளுடன் தரம் மேம்படுத்தப்பட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ் இந்த புதிய விற்பனை நிலையம் தொடக்க விழாவில் பங்கேற்பதில் தான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் நம்பிக்கை வெளிப்பட தன்மை மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து வரும் ஒரு பிராண்டை பிரதிநிதிப்படுத்துவதில் தான் பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார். கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் கல்யாணராமன் கூறுகையில் சேலத்தில் உள்ள தங்களது விற்பனை நிலையத்தை தரம் பயன்படுத்தி மீண்டும் தொடங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களுக்கு உலக தரத்திலான ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதே தங்களது நோக்கம் என்றும் கூறினார். மேலும் புது பொலிவுடன் அறிமுகப்படுத்தப்படும் விற்பனை நிலையத்தின் தொடக்கத்தை குறிக்கும் விதமாக வாடிக்கையாளர்கள் வாங்கும் நகைகளில் செய்கூலியில் கிராமுக்கு 1500 ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பை கல்யாண் ஜூவல்லர்ஸ் வழங்குகிறது. மேலும் கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு கல்யாண் பிராண்டின் தனிச்சிறப்பான நான்கு நிலை உத்தரவாத சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தங்கத்தின் தூய்மை வாழ்நாள் முழுவதும் இலவச பராமரிப்பு நகைக் குறித்த விரிவான தகவல் மற்றும் வெளிப்படையான தங்க பரிமாற்ற திட்டம் மற்றும் நகைகளை திரும்ப வாங்கும் கொள்கைகள் ஆகியவற்றை உறுதி செய்கிறதாகவும் தனது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த தரம் மற்றும் பெரும் நம்பிக்கை வழங்க வேண்டும் என்பதில் தங்களது நிறுவனம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கல்யாண் பிரபலமான உள்நாட்டு பிராண்டுகளான முகூர்த்த முத்ரா, ஷியா அனோகி ,அபூர்வா
ரங் வகைகள் மற்றும் வைர நகைகள் ஆகியவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் கேரளா திருச்சூர் தலைமை இடமாகக் கொண்டு அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வரை தனது வலுவான செயல்பாடுகளை கொண்டிருக்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் இந்தியாவில் மிகப்பெரிய சில்லறை நகை விற்பனை நிலையமாக ஒன்றாக உள்ளதாக தெரிவித்தார். ஐந்து நாடுகள் 400 கும் அதிகமான விற்பனை நிலையத்தை கொண்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0