ஞானபீட விருது பெற்ற 'கவிப்பேரரசர்' வைரமுத்துவுக்கான பாட்டுத் திருவிழா

Apr 1, 2026 - 09:09
 16
ஞானபீட விருது பெற்ற 'கவிப்பேரரசர்' வைரமுத்துவுக்கான பாட்டுத் திருவிழா

இசைச்சாரல் அமைப்பின் மூலம் ஆர் ஏ ஸ்டுடியோவில்  கவிப்பேரரசு வைரமுத்து  எழுதிய பாடல்களை 50 க்கும் மேற்பட்ட பாடகர்கள் பங்குபெற்று வைரமுத்து எழுதிய திரைப்படங்கள் பாடினர் 
 நிகழ்ச்சியில்  ஆதிசக்தி பீடத்தின் நிறுவனர் அருள் கண்ணன் அடிகள் அவர் எழுதிய பாடல்களின் இலக்கிய ரசனையும் திறமைகளையும் சங்க கால பாடல்களோடு ஒப்பிட்டு உரை நிகழ்த்தினார் .
நிறைவில் மிகச் சிறப்பாக பாடியவர்களுக்கு பரிசுகளும் பொன்னாடை வழங்கப்பட்டது 
 விழாவில் வெற்றித் தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச் செயலாளர் யோகம் ரியல் எஸ்டேட் நிறுவனர் யோகம் செழியன் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்களின் சிறப்பையும் பண்புகளையும் அவரின் கவிதை வரிகளை எடுத்து கூறி வாழ்த்துரை தொடங்கினார்  
 இதில் . மகாலட்சுமி கண்ணன் , ருக்கு ஆனந்தி சுவாமிமலை சிவசங்கரன் சக்தி ராஜேந்திரன் சுப்பிரமணியன் இன்ஜினியர் ராஜேந்திரன் பாலதுரை அரசன் மாரியன் கோயில் சுதாகர் திருபுவனம் ஹரி பிரகாஷ் , சங்கீதா ஹரி பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவில் பாடகர்கள் மயிலாடுதுறை மங்கையர்கரசி காரைக்கால் தேவி பாண்டிச்சேரி தமிழரசி மற்றும் ரஞ்சனி நைனிகா மோனிஷா மற்றும் பாடி சிறப்பு செய்தனர் முன்னதாக  இசைச்சாரல் நிறுவனர் கவிஞர் ராகவ் மகேஷ்  வரவேற்றார் நிறைவில் பேராசிரியர்  பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்