தமிழக 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்த சுதந்திர தொழிலாளர் யூனியன் (STU) ...
தமிழ்நாடு
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி மற்றும் ஆதரவு நிலப்பாடுகளை உறுதிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், சுதந்திர தொழிலாளர் யூனியன் (STU), வரவிருக்கும் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தனது முழுமையான ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாநில நிர்வாகக்குழு கூட்டம்
திருச்சி மாவட்ட (STU) அலுவலகத்தில் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் S. சிவக்குமார்தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநிலப் பொதுச்செயலாளர் A. செய்யது அலி சிறப்புரையாற்றினார். இதில் மாநிலப் பொருளாளர் அப்துல் காதர்,
S. சுப்பிரமணிஉள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கடந்த காலங்களில் தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதிலும், பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் திராவிட மாடல் அரசு
மதச்சார்பற்ற கொள்கைகளையும், முற்போக்குச் சிந்தனைகளையும் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுவது.
வருங்காலங்களிலும் தொழிலாளர்களுக்குப் புதிய நலத்திட்டங்களையும், பாதுகாப்பு உத்தரவாதங்களையும் திமுக வழங்கும் என்ற நம்பிக்கை.
இக்கூட்டத்தில், "தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது அவசியம்" என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தின் நிறைவாக திருச்சி மாவட்டத் தலைவர் M. ஷாஜகான் நன்றியுரை ஆற்றினார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்திலும், தொழிலாளர் அமைப்புகளிடையேயும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணிக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு அளித்து வருகின்ற இந்த நிலையில் தொழிலாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
0