தமிழக முதலமைச்சர் விஜய் அரசியல் கட்சித் தலைவர்களுடன் நேரில் சந்திப்பு!
தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைப் படைத்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்தச் சந்திப்புகள் அரசியல் அரங்கில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
முதலமைச்சர் விஜய் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அப்போது, அவரை உதயநிதி ஸ்டாலின் இல்லத்தின் வாசலுக்கே வந்து கட்டித்தழுவி மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றார். இந்தச் சந்திப்பின்போது மு.க. ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் இல்லத்திற்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்தார். அவரை மதிமுக எம்.பி. துரை வைகோ வாசலில் காத்திருந்து இன்முகத்துடன் வரவேற்று அழைத்துச் சென்றார். மூத்த தலைவரான வைகோவிடம் முதலமைச்சர் விஜய் வாழ்த்து பெற்றார்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் இல்லத்திலும் சந்திப்பு நடைபெற்றது. அங்கு அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்தினரை முதலமைச்சருக்கு அறிமுகம் செய்து வைத்தார். மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, அன்புமணி ராமதாஸின் குடும்ப உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் உரையாடினார்.இறுதியாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை அணிவித்து மலர்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார் முதலமைச்சர் விஜய். தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களை முதல்வர் விஜய் சந்தித்த இந்த நிகழ்வுகள், ஒரு புதிய அரசியல் பண்பாட்டின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
0