திண்டுக்கல் புனித லசால் புதுமனம் ஐடிஐ சார்பாக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு ஒளியூட்டும் ஆன்மீக யோகா நிகழ்ச்சி...
திண்டுக்கல்
திண்டுக்கல் பழனி ரோடு கே.கே. நகரில் உள்ள புனித லசால் புதுமனம் ஐடிஐ சார்பாக 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு தொடக்க விழாவானது ஜனவரி 26 ல் தொடங்கி தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.அந்த வகையில் ஒளியூட்டும் ஆன்மீக யோகா நிகழ்ச்சி புனித லசால் புதுமனம் ஐடிஐ
உள் வளாகத்தில் நடைபெற்றது. ஒளியூட்டும் ஆன்மீக யோகா
நிகழ்ச்சியை திண்டுக்கல் ஹை ஸ்டைல் பர்னிச்சர் உரிமையாளர் Rtn.D. மகேந்திரன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக அருள்ஜெயம் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர்
Er.C.பெஞ்சமின் ஆரோக்கியம் கலந்து கொண்டு ஆன்மீக யோகாவின் வழிமுறைகள், அதன் செயல்பாடுகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாணவர்களிடம் யோகா பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டு சரியான விடைகள் சொன்னவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும்
சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியை திண்டுக்கல் புனித லசால் புதுமனம் ஐடிஐ தாளாளர் Bro.உவரிஅந்தோணி, முதல்வர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் புனித லசால் புதுமனம் ஐடிஐ ஆசிரியர் M.ஜெயசீலன் நன்றி கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0