தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன்...

தஞ்சாவூர்

Apr 5, 2026 - 19:56
Apr 5, 2026 - 19:59
 0  7
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட  திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன்...

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், MLA-வுமான சாக்கோட்டை க. அன்பழகன்  பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் 

கொற்கை, மருதாநல்லூர், திப்பிராஜபுரம், தில்லையம்பூர், உடையாளூர் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தின் மூலம் அவர் நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவை திரட்டினார். அவரது வருகைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பிரச்சார நிகழ்வில், தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி. குமரன், திமுக குடந்தை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே. முத்துச்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர் மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள நலத்திட்டங்களை சாக்கோட்டை க.அன்பழகன் விளக்கமாக எடுத்துரைத்து பேசியதாவது:

  மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் இல்லத்தரசிகளுக்கு ₹8000 மதிப்புள்ள மின்சாதனங்கள் வழங்குவதற்கு கூப்பன் வழங்கப்படும் எனவும் மக்கள் சிரமம் இன்றி அந்தந்த பகுதிகளில் அருகில் உள்ள எலக்ட்ரானிக் கடைகளில் தேவையான மின்சாதன பொருட்கள் பிரிட்ஜ், வாஷிங் மிஷன், மிக்ஸி, கிரைண்டர் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை வீட்டு உபயோகத்திற்கு மக்கள் எளிதாக வாங்கிக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்ட ₹3000 நிதி உதவியையும், கோடைகால சிறப்பு நிதியாக மகளிர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்ட ₹2000 உதவித்தொகையையும் நினைவுபடுத்தி பேசினார்.

அத்துடன், சட்டமன்றத்தில் அன்பழகன் குரல் கொடுத்ததின் எதிரொலியாக கும்பகோணத்தில் புகழ்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவிலின் தெற்கு நோக்கி அமைந்துள்ள மொட்டை கோபுரத்தை ஐந்து நிலை ராஜகோபுரமாக தரம் உயர்த்தப்பட்டு உடனடியாக கோவில் பணிகள் முழுமை அடைந்திட நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்த பிரச்சாரத்தின் போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளும் இணைந்து செயல்பட்டனர்.மேலும், திமுக அரசின் சாதனைகள் மற்றும் வரவிருக்கும் தேர்தலுக்கான முக்கிய வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து, மக்களின் ஆதரவை பெற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். உள்ளூர் மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி, அவர்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். இதன் மூலம் மக்களிடம் நெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0