மாணவி பிரதிபா கொலைக்கு நீதி வேண்டி திருச்சியில் யாதவ சங்கங்கள் போராட்டம்!
திருச்சி
திருச்சி: தூத்துக்குடி மாணவி பிரதிபாவின் படுகொலைக்கு நீதி கோரியும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட அனைத்து யாதவ சங்கங்களின் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டமும், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.
மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி
போராட்டத்தின் தொடக்கமாக, படுகொலை செய்யப்பட்ட மாணவி பிரதிபாவின் உருவப்படத்திற்கு முன்னால் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். எடத்தெரு லோ.முத்துகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தலைமை மற்றும் முன்னிலை
இந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்விற்கு யாதவ மகாசபை மாவட்டத் தலைவர் தங்கராஜ், முல்லை மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் பா.ஸ்ரீதர் ஆகியோர் தலைமை தாங்கினர். யாதவ இளைஞரணி நிர்வாகிகள் எஸ்.சரவணன், எஸ்.சேதுராமன், பி.எஸ்.கே. கண்ணன், எஸ்.கோபி ஆறுமுகம், இராமநாதன், பார்த்தசாரதி, ரகுராம், வெங்கடேஷ், சேது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்டன உரைகளும் கோரிக்கைகளும்
தொடர்ந்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் ஆவேசமாக உரையாற்றினர்.
* பாரதராஜா யாதவ் (பாரத முன்னேற்றக் கழகத் தலைவர்)
* திருவேங்கடம் யாதவ் (தமிழ்நாடு-புதுச்சேரி யாதவ சங்க ஒருங்கிணைப்பாளர்)
* மீசை வெங்கடாசலம், வழக்கறிஞர் கெள்சல்யா, நீலமேகம் யாதவ் (பிற்படுத்தப்பட்டோர் இயக்கம்), வாசுதேவன், எல்.ஐ.சி.முருகானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
முக்கிய முழக்கங்கள்:
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், "மாணவி பிரதிபாவை கொன்ற கயவர்கள் மீது அரசு தயவு காட்டாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தி விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர்.
திரளாக பங்கேற்ற பொதுமக்கள்
இந்த அறப்போராட்டத்தில் எம்.ஆர்.இராமச்சந்திரன், வினோத் பாண்டி, என்.பார்த்திபன், டைமன் தாமோதரன், சி.முத்தையன், ஆயில் சீனிவாசன், சுந்தர், ஆசைத்தம்பி, ரேணுகாதேவி, செந்தில் முருகன், தேக்க பெருமாள், டி.வி.கோவில் விஜய், இராமச்சந்திரன் எனப் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர். எடத்தெரு, ஸ்ரீரங்கம் மற்றும் மருங்காபுரி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் இப்போராட்டத்தில் திரளாகப் பங்கேற்றனர்.
நிகழ்வின் நிறைவாக பார்த்தசாரதி அனைவருக்கும் நன்றி கூறினார். இந்த கொடூர கொலைகள் ஆரம்பத்திற்கு எதிராக இந்த போராட்டத்தினை கையில் எடுத்துள்ளனர் என்று குறிப்பாக கருத்து தெரிவித்துள்ளார்கள்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0