65,000 க்கும் மேற்பட்ட நபர்களிடம் பல கோடி சுருட்டிய வழக்கு முடிக்கு வருவது எப்போது...?
திருச்சி
நிதி நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்த திருச்சி பெல் (BHEL) ஊழியர் மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட நபர் பத்திரிகையாளர் சந்திப்பில் புகார்.திருச்சி திருவெறும்பூர், கபிலர் தெருவைச் சேர்ந்த G. நித்யானந்தம் என்பவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த 2017-ம் ஆண்டு, நியோ மேக்ஸ் (Neo Max) என்ற நிதி நிறுவனத்தின் கிளையை நடத்தி வந்த ரமேஷ் மற்றும் R. சுகன்யா ஆகியர் என்னை சந்தித்தனர். தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் பெரும் லாபம் கிடைக்கும் என அவர்கள் ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பி நானும், எனது தாய் தந்தை மற்றும் உறவினர்கள் மூலமாக சுமார் ரூபாய் 8 கோடி வரை நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தோம்.முதலீடு செய்த பணத்திற்கு உரிய லாபமோ அல்லது அசல் தொகையோ வழங்காமல் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த தம்பதியினர் இழுத்தடித்து வந்துள்ளனர். இது குறித்து கடந்த 2024-ம் ஆண்டு நித்யானந்தம் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தோம். விசாரணையில், சம்பந்தப்பட்ட ரமேஷ் என்பவர் தற்போது BHEL நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், அவர் சுமார் 65,000-க்கும் மேற்பட்ட நபர்களிடம் இதேபோல் பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.இவ்வாறு மோசடி செய்த பணத்தைக் கொண்டு ரமேஷ் மற்றும் சுகன்யா தம்பதியினர் திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஏக்கர் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள ரமேஷ் மற்றும் சுகன்யா மீது காவல்துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்," என வேதனையுடன் தெரிவித்தார்.இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊடகத்தினர் வாயிலாக காவல்துறையிடம் கோரிக்கை வைத்தார். நிலுவையில் இருக்கும் வழக்கு தீர்க்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.
What's Your Reaction?
Like
2
Dislike
1
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
0