சி.டி. செல்வம் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து காவல் ஆணையத்தின் 2023-24ஆம் ஆண்டிற்கான பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்தார்.
சி.டி. செல்வம் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து காவல் ஆணையத்தின் 2023-24ஆம் ஆண்டிற்கான பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஐந்தாவது காவல் ஆணையத்தின் தலைவர் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் சி.டி. செல்வம் சந்தித்து, தமிழ்நாடு காவல் ஆணையத்தின் 2023-24ஆம் ஆண்டிற்கான பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்தார். இந்நிகழ்வின்போது தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல் ஆணையத்தின் உறுப்பினர்கள் கா. அலாவுதீன், (ஓய்வு), முனைவர் கே.இராதாகிருஷ்ணன், (ஓய்வு), மேனாள் பேராசிரியர் முனைவர் நளினி ராவ், மரு. சி. ராமசுப்பிரமணியன், உறுப்பினர் செயலர் காவல் துறை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால், ஆகியோர் உடனிருந்தனர்.
What's Your Reaction?






