அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் திரையிடப்பட்டதை முன்னிட்டு ரசிகர்கள் ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது...
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் திரையிடப்பட்டதை முன்னிட்டு ரசிகர்கள் ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது...
சென்னை:
தாம்பரம் வித்யா திரையரங்கில் அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் திரையிடப்பட்டது.
தாம்பரம் மாந்தோப்பு பகுதியைச் சார்ந்த அஜித் ரசிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விடாமுயற்சி சிறப்புக் காட்சி முடிந்தவுடன் அனைத்து ரசிகர்களும் பசியின்றி வீடு செல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் அனைவருக்கும் ரசிகர்கள் ஏற்பாட்டில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு உணவு பரிமாற்றப்பட்டது.
தாம்பரம் வித்யா திரையரங்கு உரிமையாளர் மற்றும் தாம்பரம் காவல்துறை, அஜித் ரசிகர்கள் சாரதி, சேது, பார்த்தி, டில்லி கணபதி ,ஆனந்த், ராஜேஷ் உட்பட ஏராளமான அஜித் ரசிகர்கள் உடன் இருந்தனர்.
What's Your Reaction?






