ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா...
ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா...

ராணிப்பேட்டை:
ஆற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி சட்டைகள் அணிந்து மண்பானையில் பொங்கல் வைத்து விழாவை சிறப்பாக நடத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து நாற்காலி போட்டி, லெமன் ஸ்பூன் போட்டி, பலூன் ஊதும் போட்டி போன்ற விளையாட்டுகள் மற்றும் கேளிக்கைகள் என அனைவரும் உற்சாகமாய் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதில் ஆற்காடு வட்டாட்சியர் பாக்கியலட்சுமி, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் வட்டாட்சியர் சரவணன், துணை வட்டாட்சியர்கள் விஜய சேகர் ,சந்தியா, வீரராகவன் , வருவாய் ஆய்வாளர்கள் விசாகரன் கார்த்திகேயன், நில அளவை அதிகாரி ஹரி மற்றும் அலுவலகத்தில் பணி புரியும் கிராம நிர்வாக ஊழியர்கள், வருவாய் அலுவலக ஊழியர்கள், சிப்பந்திகள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பாகும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடினார்கள்.
What's Your Reaction?






