கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் 2 நாளாக ஜல்லிக்கட்டு போட்டி...

கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் 2 நாளாக ஜல்லிக்கட்டு போட்டி...

Feb 12, 2025 - 14:24
 0  4
கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் 2 நாளாக ஜல்லிக்கட்டு போட்டி...

மதுரை:

அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் 2 நாளாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி காலை 7:00 மணியளவில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட 1000 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்கின்றனர். களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளைகளை தழுவும் வீரர்களுக்கும் தங்ககாசு, சைக்கிள், மிக்ஸி, மெத்தை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, கிழக்கு தெற்கு , கிழக்கு வடக்கு மற்றும் வண்டியூர் பகுதி காளைகள்  பங்கேற்கின்றன. பொது மக்கள் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் கண்டு ரசிக்க பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow