வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது...

வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது...

Feb 11, 2025 - 16:08
 0  4

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் கணபதி நகரில் அமைந்துள்ள செல்வ ராஜகணபதி கோயிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் அமைந்துள்ளது செல்வ ராஜ கணபதி கோயில். இங்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், விஷ்ணு துர்க்கை அம்மன், பக்த ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரகங்கள் அமைந்துள்ளது. இக்கோயிலில் அனைத்து சிறப்பு நாட்களிலும் வழிபாடு அர்ச்சனைகள் நடப்பது வழக்கம்.

அந்த வகையில் தைப்பூசத்தை முன்னிட்டு இக்கோயிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.கரும்பு சாறு, பால், பன்னீர், திரவியப்பொடி, சந்தனம், மஞ்சள், இளநீர். தேன், பஞ்சாமிர்தம், நெய் போன்ற அபிஷேகங்கள் நடந்தன.

சுவாமிக்கு பச்சிலை அலங்காரம் நடந்தது. முன்னதாக உலக நலன் வேண்டி சிறப்பு யாகம், கூட்டு பிரார்த்தனை நடந்தது. மேலும் செல்வ ராஜ கணபதி, விஷ்ணு துர்க்கை அம்மன், பக்த ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரகங்களுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow