மதுரையில் உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சி...

மதுரையில் உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சி...

Mar 17, 2025 - 12:40
 0  18
மதுரையில் உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சி...
மதுரையில் உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சி...

மதுரை:

மதுரையில் உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட உலக சாதனை முயற்சி.

மதுரையில் பிரபல ஈவன்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனமான “யூ அன்ட் மீ ஈவன்ட்”, உலக பெண்கள் தினம் மார்ச் 8 என்பதை மையமாக கொண்டு, இந்த மாதம் 8 கல்லூரி, 8 போட்டிகள், 8 நிகழ்ச்சி, 8 சிறப்பு விருந்தினர்கள் என “வாடிராசாத்தி” என்ற தலைப்பில் கல்லூரியில் நடக்கும் பெண்களுக்கான சிறப்பு உலக சாதனை நிகழ்ச்சியை தொடங்கியது. இதன் படி மார்ச் 4ம் தேதி டோக் பெருமாட்டி கல்லூரியில் தொடங்கி, மார்ச் 5 அமெரிக்கன் கல்லூரி மதுரையிலும், மார்ச் 6 அம்பிகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், மார்ச் 7 மதுரை காந்தி என்எம்ஆர் சுப்பராமன் கல்லூரியிலும், மார்ச் 8ம் தேதி மதுரை மங்கையர்க்கரசி கல்லூரியில் உள்ள மங்கையர்க்கரசி மகளிர் கல்வி கல்லூரி , மங்கையர்க்கரசி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மங்கையர்க்கரசி பொறியியல் கல்லூரி எனும் 3 கல்வி நிறுவனங்களுக்கும், மார்ச் 13ம் தேதி ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியிலும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதை உலக சாதனை முயற்சியாக அங்கீகரித்து “லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்” நிறுவனம், “யூஅன்ட்மீ ஈவன்ட்” நிறுவனத்தின் நிறுவனர் விஜே. சுஜி மற்றும் ராகவன் அவர்களிடம், உலக சாதனை சான்றிதழ் மற்றும் உலக ரெகார்ட் மெடல் வழங்கி கவுரவபடுத்தியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow