தேனி:
தேனியில் தமிழக அரசை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி பங்களா மேட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகத்தில் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து தேனி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் விக்னேஷ் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை தமிழக அரசு தடுத்து நிறுத்தி பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.மேலும் திமுக அரசை அகற்றிட வேண்டுமென கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் நகர செயலாளர் தினேஷ். மாவட்ட கழக சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக வார்டு செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.