மதுரை:
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 36 புதிய பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மதுரை வடக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சிங்காரவேலு, பொது மேலாளர் மணி, மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.