மதுரை மாவட்டம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஐம்பெரும் விழா...

மதுரை மாவட்டம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஐம்பெரும் விழா...

Mar 17, 2025 - 12:49
 0  24
மதுரை மாவட்டம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஐம்பெரும் விழா...
மதுரை:
மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஐம்பெரும் விழா 
கணித கண்காட்சி, பரிசளிப்பு விழா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா, மகளிர் தின விழா ஆகிய ஐம்பெரும் விழாக்கள் வட்டாரக் கல்வி அலுவலர் ஜான்சி தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். பறை இசைத்தும், சிலம்பும் சுழற்றியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. கணித கண்காட்சியினை வட்டார கல்வி அலுவலர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பை தினமானது பை தின வாழ்த்துக்கள் எழுதிய கேக் வெட்டி, பை வேடமணிந்த குழந்தைக்கு கொடுக்கப்பட்டது. கணித கண்காட்சியில் π மனிதன், π ன் மதிப்பு மற்றும் குறியீடு, வட்டத்தின் விட்டத்திற்கும் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு, மாயச்சதுரம், மந்திர பலகை, முப்பது விதமான வடிவங்கள் தகவமைப்பு, வர்க்கம், கணம் மூலம் எளிமையாக கண்டறிதல், முன்னி, தொடரி, டேன்கிராம் துண்டுகளில் வடிவங்கள், ட்ரிக்கி 20முக்கோணம், எளிய முறையில் வாய்ப்பாடுகள் உருவாக்கல், கணித கூற்று, அமைப்பு நகரம், எண்களை எண்ணுதல், வடிவங்கள், கணித கோபுரம், தராசு, லிட்டர், இடமதிப்பு, எண்கள் விரிவாக்கம், எளிய முறையில் பெருக்கல், நான்கு அடிப்படை செயல்பாடு கருவி, ஏடிஎம் எந்திரம், கணித புதிர்கள், கோணங்கள், 24 மணி நேர கடிகாரம் உட்பட சுமார் 60 கணித மாதிரிகள் படைக்கப்பட்டன. தேர்வில் முதல், இரண்டு, மூன்றாம் இடங்கள் பிடித்த மாணவர்கள், நன்னடத்தையில் சிறந்த மாணவர்கள், ஓவியம் சிறப்பாக வரைந்த மாணவர்கள், கைவினைப் பொருட்கள் சிறப்பாக செய்த மாணவர்கள், சுற்றுச்சூழலில் சிறந்த மாணவ, மாணவிகள், சிலம்பம் உலக சாதனை செய்த மாணவிகள், பறை இசை மாணவர்கள், வினாடி வினா, பரதம், கலை நிகழ்ச்சி போன்றவற்றில் சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மேலாண்மை குழு தலைவர் தஸ்லீம் பானு மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மெடல் அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.

மதுரை அழகு கலை சங்கத் தலைவர் கவிதா, செயலாளர் உமா, பொருளாளர் மதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மகளிர் தின வாழ்த்துக்கள் வழங்கி மாணவ மாணவிகளுக்கு கேக் வழங்கி கொண்டாடினார். விழாவில் நன்கொடையாளர்கள் பென்குயின் ஜெராக்ஸ் உரிமையாளர், சசிகலா டயர்ஸ் உரிமையாளர், ஞானம் டிரேடிங் கம்பெனி, பெருங்காய கம்பெனி உரிமையாளர், கல்லாணை, ஆரோக்கியா டிரஸ்ட் பணியாளர்கள், ஏகம் தொண்டு நிறுவன பணியாளர்கள், அய்பா சங்க பொறுப்பாளர்கள் ஆகியோர் பாராட்டப்பட்டனர். கணிதத்தை மிக எளிமையாக சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் மேலமடை பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியை பொய்லி அவர்களுக்கு சிறப்பு பரிசும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. விழாவில் தொழிலதிபர் ஞான சிகாமணி, ஆரோக்கியா தொண்டு நிறுவன மேலாளர் முத்துராமன், பணியாளர் கலைவாணி, ஏகம் பவுண்டேஷன் பணியாளர்கள் ராஜேஷ், அன்பரசன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், புதிய பாரத எழுத்தறிவு திட்ட உறுப்பினர்கள், பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். கணித பட்டதாரி ஆசிரியை அனுசியா நன்றி கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow