தரை பாலம் சரி செய்யபடாததால் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல சிரமம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா..!!
தரை பாலம் சரி செய்யபடாததால் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல சிரமம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா..!!
திண்டுக்கல்:
பழனி அருகே உடைந்த நிலையில் உள்ள தரை பாலம் சரி செய்யபடாததால் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல சிரமப்படும் கிராம மக்கள்- பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்.
பழனியை அடுத்த குதிரையாறு அணை பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குதிரையாறு அணை கிராமத்தில் வசித்து வந்த கச்சம்மாள் என்ற எழுபது வயது மூதாட்டி இயற்கை மரணம் அடைந்தார்.
மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதற்காக குதிரையாறு அணைக்கு அருகில் உள்ள தரைப் பாலத்தைக் கடந்து இடுகாட்டிற்கு உடலை உறவினர்கள் எடுத்துச் சென்றனர். கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்து இருந்தது.
இடுகாட்டிற்கு செல்ல வேறு வழி இல்லாததால் உறவினர்கள் இறந்தவரின் உடலை சேதமடைந்த தரைப் பாலத்தைக் கடந்து எடுத்துச் சென்றனர். தரைப் பாலத்தை சரி செய்து பொதுமக்கள் எளிதாக செல்ல பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
What's Your Reaction?






