தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகளை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வழங்கினார்...

தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகளை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வழங்கினார்...

Jan 20, 2025 - 11:14
 0  53

பழனி:

பழனி  தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகளை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.  திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

தைப்பூச திருவிழா இன்னும் 10 நாட்களில் துவங்க உள்ள நிலையில் மதுரை, கோவை,சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநில பக்தர்களும் பாதயாத்திரையாக அதிகமாக வருகை தருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பழனி வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் ஸ்ரீதரன் இணைந்து இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளும் பொழுது மிகவும் கவனமாக நடந்து செல்ல வேண்டி விழிப்புணர்வு வழங்கியும் , பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகளையும் வழங்கினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow