பழனியில் தனியார் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்: பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்த குழந்தைகள்...
பழனியில் தனியார் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்: பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்த குழந்தைகள்...
திண்டுக்கல்:
பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் உள்ள ராமச்சந்திரா இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. எல் கே ஜி குழந்தைகள் முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இதில் கோலப் போட்டிகள் உறியடித்தல் கும்மியாட்டம் சிலம்பம் சுற்றுதல் மியூசிக் சேர் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை சிறு குழந்தைகள் உற்சாகமாக விளையாடி பொங்கல் விழாவை கொண்டாடினர்.
பள்ளி தாளாளர் ரஞ்சிதம் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் உற்சாகமாக கைதட்டியும் ஆரவாரம் செய்தும் போட்டியில் கலந்து கொண்டவர்களை ஊக்கப்படுத்தினர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
What's Your Reaction?






