சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அபராதம்...
சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அபராதம்...

திண்டுக்கல்:
பழனிச்சாலை பைபாஸ் பகுதியில் அரசு முத்திரை இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததையடுத்து
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று இறைச்சி விற்பனை செய்யப்படும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஒரு இறைச்சி கடையில் கெட்டுப்போன இறைச்சி வைத்திருந்ததை கண்டுபிடித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இறைச்சிகளை கைப்பற்றி பெனாயில் ஊத்தி அளித்தனர் மேலும் அந்தக் கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
What's Your Reaction?






