திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வரும் 8ந்தேதி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெறுகிறது...

திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வரும் 8ந்தேதி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெறுகிறது...

Feb 7, 2025 - 16:14
 0  7
திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வரும் 8ந்தேதி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெறுகிறது...

வேலூர்:

வேலூரில் திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வரும் 8ந்தேதி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்துகிறது நறுவீ தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தகவல்.

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, தோட்டப்பாளையம் வடக்கு, கிரீன் சர்க்கிள் அடுத்த, நறுவீ மருத்துவமனை நிறுவனர் ஜி.வி.சம்பத் விளையாட்டு தொடர்பான அறிக்கை, திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களை திறமையான கிரிக்கெட் வீரர்களாக உருவாக்க தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 37 மாவட்டங்களில் இது நடக்க உள்ளது. வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான தேர்வு வரும் 8ம் தேதி வேலூரில் நடைபெற உள்ளதாக மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவரும் நறுவீ மருத்துவமனை தலைவருமான முனைவர் ஜி.வி.சம்பத் தகவல் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் மேலும் கூறிள்ளதாவது:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களை திறமையான கிரிக்கெட் வீரர்களாக உருவாக்க தேர்வு செய்து அவர்களுக்கு சென்னையில் திறமையான கிரிக்கெட் பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்க உள்ளது. வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்வதற்கான நிகழ்வு வரும் 8ம் தேதி சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் சேண்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள இராஜேஸ்வரி எஸ்டேட் வளாகத்தில் நடைபெறுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு தொடங்கும் இத்தேர்வில் 13 வயது முதல் 21 வயது வரை உள்ள இளம் வீரர்கள் இதில் பங்கேற்கலாம்.

19 வயதுக்கு மேற்பட்ட மாநில அளவிலான கிரிக்கெட் வீரர்கள் இத்தேர்வில் பங்கேற்க அனுமதி இல்லை. இது சம்மந்தமாக மேலும் தகவல் அறிய வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க கௌரவ சங்க செயலாளர் எஸ். ஸ்ரீதரனை மொபைல் எண். 7010594657 மூலமாக தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம் என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow