ராணிப்பேட்டை:
கீழ்விஷாரம் அருகே இராசாத்துபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தில் 25 ஆம் ஆண்டு திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா மற்றும் தெப்ப உற்சவ விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது ஆலயத்தில் அருள்மிகு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் இருந்து பல்லக்கின் மூலம் பக்தர்கள் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகனை தோள்களில் சுமந்தபடி மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர் அப்போது ஏராளமான பக்தர்கள் பல்லாக்கில் முருகப்பெருமான் காட்சியளித்தபடி வருவதை பார்த்து வணங்கி பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.
பின்னர் கோயில் குளக்கரையில் பல்வேறு மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்ப உற்சவ தேரில் முருகப்பெருமான் அமர வைக்கப்பட்டு குளத்தின் நதியில் மிதந்தபடி மூன்று முறை வலம் வந்து குளக்கரையைச் சுற்றி நின்றிருந்த ஏராளமான பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சியளித்தார் இதனை கண்ட பக்தர்கள் பக்தியோடு முருகப்பெருமானை வணங்கி கோஷங்களை எழுப்பி முருகப்பெருமானின் அருளாசி பெற்று சென்றனர்.