பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளின் அறிவியல் கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளின் அறிவியல் கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

Jan 23, 2025 - 11:07
 0  8
பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளின் அறிவியல் கண்காட்சி: மாவட்ட  ஆட்சியர் துவக்கி வைப்பு
வேலூர்:
வேலூரில் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளின் அறிவியல் கண்காட்சி 4 நாட்கள் நடக்கிறது மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் -  வேலூர் மாவட்டத்தில்  சிறுத்தைகள் நடமாட்டத்தை கட்டுபடுத்த தொடர்ந்து ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறோம் காட்டுபகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேட்டி.

சேர்க்காட்டில் தமிழக அரசின் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் உள்ளது இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 2025 அறிவியல் திருவிழா துவங்கியது துணை வேந்தர் ஆறுமுகம்,தலைமையில் நடந்த துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி இவ்விழாவினை துவங்கி வைத்தார் இதில் பல்கலைக்கழகத்தின் அறிவியல் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் யுவராஜன் தினகரன் மற்றும் பதிவாளர் செந்தில் வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர் இக்கண்காட்சியில் 17 பள்ளிகள் 35 கல்லூரிகளை சேர்ந்த 140 புதிய கண்டுபிடிப்புகள் இக்கண்காட்சியில் இடம் பெறுகிறது இதனை தவிர பேச்சு போட்டி அறிவியல் வினாடி வினா போட்டிகளும் நடக்கிறது  21 முதல் வரும் 24 ஆம் தேதி வரையில்  கண்காட்சி நடக்கிறது இதனை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பார்வையிட உள்ளனர்.
 

மாணவ,மாணவிகளின் புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் வியந்து பார்த்து செல்கின்றனர். பின்னர் ஆட்சியர் சுப்பு லெட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூர்மாவட்டத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் கேவிகுப்பம் குடியாத்தம் பகுதிகளில் உள்ளது இதனை கட்டுபடுத்த ஓர் இடத்தில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி சிறுத்தையை விரட்டினோம் சிறுத்தையை விரட்ட வனத்துறையினரும் வருவாய்த்துறையினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டத்தை கண்டறிந்து அவைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கிறோம் குறிப்பாக கிராம மக்கள் காட்டை ஒட்டியுள்ள மலை அடிவார மக்கள் காட்டு பகுதிகளில் தங்களுடைய ஆடுமாடுகளை ஓட்டி செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம்.

தற்போது சிறுத்தைகளை விரட்ட ஏ.ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறுத்தைகளை விரட்ட தமிழக அரசுக்கு அனுமதி கோரியும் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம் அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இம்மாவட்டத்தில் சிறுத்தைகளை விரட்ட நடவடிக்கை எடுப்போம் இம்மாவட்டத்தில் இதுவரையில் 80 கிராமங்களுக்கு காளைவிடும் விழாவுக்கு அனுமதி அளிக்கபடுகிறது அனுமதியில்லாமல் யாரும் நடத்த கூடாது புதியதாக நடத்தவிரும்புபவர்கள் புதியதாக விண்ணப்பங்களை கொடுத்தால் பரிசீலனை செய்து நடத்த தயாராக உள்ளோம் இம்மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு 90 சதவிகிதம் வழங்கப்பட்டுவிட்டது ஆனால் இலவச வேட்டி சேலை இதுவரையில் 44 சதவிகிதம் தான் வழங்கப்பட்டுள்ளது இம்மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.

திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை கொடுக்கும் இப்பல்கலைக்கழக அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றவர்கள் அனைவரும் கிராமப்புற மாணவர்கள் ஆனால் துவக்க விழா ஆங்கிலத்திலேயே நடந்தது எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என கூறும் தமிழக அரசின் இந்த செயல் தமிழார்வலர்களிடையே முகசுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow