இராணிப்பேட்டை:
ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி, ஒன்றிய தலைவர் ஆய்வு
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சித்தூர் கிராமத்திலிருந்து முருங்கை வரை செல்லும் 3 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை, பழுதடைந்து மிக மோசமான நிலையில் இருந்தது. சித்தூர், கணபதிபுரம், சேந்தமங்கலம், பள்ளூர், முருங்கை, தக்கோலம், பரமேஸ்வரமங்கலம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், இதனை சீரமைத்து தரக்கோரி, கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் (MGSMT) கீழ், ரூ.1.07 கோடி மதிப்பீட்டில், தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனை நெமிலி ஒன்றிய தலைவர், வடிவேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியினை தரமாகவும், விரைவாகவும் முடிக்க ஒப்பந்ததாரரையும், அதிகாரிகளையும் வலியுறுத்தினார். அப்போது சேந்தமங்கலம் கிளை செயலாளர், சம்பந்தன், ராமு, ரோஷன், கோகுல் ஆகியோர் உடனிருந்தனர்.