இராணிப்பேட்டையில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு!

இராணிப்பேட்டை

Mar 30, 2026 - 13:02
 3
இராணிப்பேட்டையில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு!

இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான முனைவர் ஜெ.யு. சந்திரகலா இ.ஆ.ப.,  தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு, 042. இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், “100% வாக்குப்பதிவு – தேர்தல் நாள் என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் மாணவியர்கள் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குனர்  செந்தில் குமரன், கல்லூரி முதல்வர் முனைவர் நசீம் ஜான், துணை முதல்வர் முனைவர் பூங்குழலி, உதவி திட்ட அலுவலர்கள்  வெங்கடேசன்,  வில்லியம்ஸ்,  அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.