ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு விவசாயம் கடும் பாதிப்பு....விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை!

இராணிப்பேட்டை

Mar 31, 2026 - 14:11
 0  22
ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு   விவசாயம் கடும் பாதிப்பு....விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை!
ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு   விவசாயம் கடும் பாதிப்பு....விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை!
ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு   விவசாயம் கடும் பாதிப்பு....விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை!
ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு   விவசாயம் கடும் பாதிப்பு....விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை!

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், கொண்டாபுரம் கிராமத்தில் ஏரி கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பாசனத்திற்கு நீர் இன்றி விவசாய நிலங்கள் வறண்டு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கொண்டாபுரம் பகுதியில் உள்ள சர்வே எண்கள் 284/3, 287/1, 287/2 ஆகிய நிலங்களில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் மற்றும் இதர பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் ஏரி கால்வாயை, ஒருசில தனிநபர்கள் ஆக்கிரமித்து அடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், விவசாய நிலங்களுக்குச் செல்ல வேண்டிய தண்ணீர் முழுமையாகத் தடைபட்டுள்ளது.
வாழ்வாதாரம் பாதிப்பு:
ஏற்கனவே இடுபொருட்களின் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் விவசாயம் செய்து வரும் தங்களுக்கு, இந்த ஆக்கிரமிப்பு பேரிடியாக அமைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். "உயிர்போல வளர்த்த பயிர்கள் கண்ணெதிரே காய்ந்து கருகுவதைப் பார்க்க முடியவில்லை" என அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகளுக்குக் கோரிக்கை:
இந்த ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்த் துறையினரிடம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் 
எனவே, இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும்  வட்டாட்சியர் உடனடியாக தலையிட்டு:
  ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கால்வாய் பகுதியை முறையாக நில அளவை (Survey) செய்ய வேண்டும்.சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி கால்வாயைத் தூர்வார வேண்டும்.பயிர்களைக் காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் பாசன வசதியைச் சீரமைக்க வேண்டும். நீங்கள் உங்கள் கோரிக்கையை ஏற்று நிறைவேற்ற வேண்டும் அப்படி தவறும் பட்சத்தில் நாங்கள் விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராட்டம் என்ற ஆயுதத்தை எடுப்போம் என்று எச்சரிக்கையை  கூறினார்கள்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0