சென்னைக்கு சவால் விடும் வகையில் வளர்ந்துள்ளது: வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
திருச்சி
திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர் கே.என். நேரு வரவேற்புரை ஆற்றினார்.
திருச்சிக்கான 'மெகா' திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு பற்றி
மேடையில் பேசிய முதல்வர், கடந்த ஐந்து ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மட்டும் 26,066 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகப் பட்டியலிட்டார்.
சென்னைக்கு இணையான வசதிகளுடன் பஞ்சப்பூரில் அமையப் பெற்றுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை கண்டு மற்ற மாநில அரசுகள் விமான நிலையத்தை போல இருக்கிறது என்று கருத்துகள் கூறினார்கள் என்று மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
திருவரங்கம் பேருந்து நிலையம் மற்றும் துறையூரில் புதிய அரசு கலைக் கல்லூரி.
சமயபுரத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட தங்கத்தேர் உலா.
மணப்பாறையில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழிற்சாலை.
திருவரம்பூரில் உள்ள சூரியூரில் மினி மைதானம் மற்றும் ஜல்லிக்கட்டு மைதானம் நிறுவப்பட்டு உள்ளது.
கே.என். நேரு அவர்களின் அமைச்சரவை தலைமையில் செயல்படுத்தப்பட்ட 9 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மற்றும் 18 மறு சீரமைப்பு குடிநீர் திட்டம் .
வருங்காலத் திட்டங்கள் (திராவிடம் 2.0)
திருச்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல 'திராவிடம் 2.0' திட்டத்தின் கீழ் புதிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்:
டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் மாணவர்களுக்காகப் பிரம்மாண்டமாக அமைய உள்ள காமராஜர் நூலகம்.
பஞ்சப்பூரில் அமையவுள்ள நவீன டைடல் பூங்கா.
விளையாட்டுத் துறையை மேம்படுத்த சூரியூரில் அமையவுள்ள ஒலிம்பிக் அகாடமி.நாங்கள் அறிவிப்பதெல்லாம் வெறும் திட்டங்கள் அல்ல, இவை ஒவ்வொன்றும் மெகா திட்டங்கள்; திருச்சி இப்போது சென்னைக்கே சவால் விடும் வகையில் வளர்ந்திருக்கிறது என்பதை நெஞ்சை நிமிர்த்திப் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்," என்று முதல்வர் உற்சாகமாகப் பேசினார்.நாங்கள் சொன்ன திட்டத்தை செய்தோம் சொல்லாத திட்டத்தையும் செய்தோம் செய்வது மட்டுமே சொன்னோம் என்று கூறினார்
நலத்திட்டங்கள் குறித்த விளக்கம்
மகளிர் விடியல் பயணம் (இலவச பேருந்து வசதி), மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி, மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் மூலம் 9 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவதை முதல்வர் சுட்டிக்காட்டினார். மேலும், காலை உணவுத் திட்டம் ஒன்பது லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள் மற்றும் 'நான் முதல்வர்' திட்டத்தின் கீழ் 4,200 மாணவர்கள் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், 8,000 ரூபாய் மின் உபகரணக் கூப்பன் திட்டம் குறித்துப் பேசுகையில், மக்கள் தங்களுக்குப் பிடித்தமான நிறுவனங்களின் வாஷிங் மெஷின், டிவி, மிக்ஸி போன்றவற்றைத் தரமாகத் தேர்வு செய்யவே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கினார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும் மற்றும் எந்த ஒரு மீட்டர் இல்லாமல் நவீன பம்பு செட்டுகள் அளிக்கப்படும் என்று கூறினார்கள்
நெல் கொள்முதல் விலை நிர்ணயம் 3500
கரும்பு 1 டன்னுக்கு 4500 பால் ஒரு லிட்டருக்கு
ஐந்து ரூபாயும் உயர்த்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் மானியம் 2000 இருந்து 2500 ரூபாயாகவும் முதியோருக்கு மாதம் மானியம் 2000 ரூபாய் மீன்பிடிப்பு தடைக்காலத்தில் 8000 லிருந்து 12000 ஆகும்
பேரிடர் காலத்தில் இழப்பீடு பயிர்கள் இழப்பீடு
இறைவறை பயிர் இழப்பீடு 25000.
நீண்ட நாள் நெற்பயிருக்கு 27,000 ரூபாய்.
இடைக்கால நெற்க்கதிர் 12,000.
உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகளில் லேப்டாப் வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்குள் பத்தாயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும்.முதல்வர் படிப்பகங்கள் அமைக்கப்படும். அரசு பள்ளியிலிருந்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் இருந்து 1500 ஆக மாற்றப்படுகிறது . மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள மகளிர்க்கு தொழில்முனை தொடங்குவதற்கும் சுவராட்டி மானியத்துடன், சுரிட்டி இல்லமால் கடன் 5 லட்சம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அரசியல் விமர்சனம்
அதிமுக மற்றும் பாஜக கூட்டணியைக் கடுமையாகச் சாடிய முதல்வர், அதிமுக பாஜகவின் அடிமையாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். மதுரையில் பெரியார் படத்தை அகற்றச் சொன்னபோது மௌனம் காத்தது, ஆளுநர் கூட்டத்தில் திராவிடத் தலைவர்கள் அண்ணா பெரியாரை இழிவுபடுத்தப்பட்டபோது தட்டிக் கேட்கவில்லை . எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருந்திருந்தால் இதனை தட்டிக் கேட்காமல் இருந்திருப்பார்களா அதைவிடCAA சட்டகளுக்கு முதலில் ஆதரவு தெரிவித்தார் பின்பு எதிர்ப்பினை தெரிவித்தார். இப்போது எடப்பாடி பழனிச்சாமி CAA சட்டத்திற்கு எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார் என்று கேட்டு சொல்லுங்கள் கூறினார் அதிமுகவின் செயல்பாடுகளை விமர்சித்தார். "தமிழகத்தின் உரிமைகளை பாஜகவிடம் அடகு வைக்கும் அதிமுகவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.
வாக்குச் சேகரிப்பு
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் மீண்டும் திமுகவின் பொற்கால ஆட்சி தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் முதல்வர் அன்புடன் கேட்டுக்கொண்டார்.
What's Your Reaction?
Like
1
Dislike
1
Love
0
Funny
0
Angry
0
Sad
1
Wow
0