திமுக கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மணப்பாறை தொகுதி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு...

திருச்சி

Apr 1, 2026 - 09:47
 0  7

மீண்டும் திமுக கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மணப்பாறை தொகுதி
மனித நேய மக்கள் கட்சி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு
காவிரி உபரி நீரை பொன்னணியாறு அணைக்கு கொண்டு வரும் திட்டத்தை மீண்டும் கழக ஆட்சிக்கு அமைந்த பின் நிறைவேற்றுவதாக உறுதி

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி 4 வது முறையாக இந்த முறையும் தி.மு.க கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது மீண்டும் வேட்பாளராக களம் காண்கிறார். இதையடுத்து மணப்பாறை தொகுதிக்கு வந்த அவருக்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தாரை தப்பட்டை முழங்க பொத்தமேட்டுப்பட்டியில் இருந்து பேருந்து நிலையம் அருகே வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் அப்துல் சமது.
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த முறை தேர்தலில் வென்று மணப்பாறை தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள பொன்னணியாறு மற்றும் கண்ணூத்து அணைகளுக்கு மாயனூரில் இருந்து காவிரி உபரி நீரை கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தித் தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு திட்டத்தை செயல்படுத்துவேன் என்றார்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0