மக்களுக்கு, செயல்படாத உழைப்பாளர் நலக்கூடம்!

திருச்சி

Apr 7, 2026 - 10:53
Apr 7, 2026 - 10:57
 20
மக்களுக்கு, செயல்படாத உழைப்பாளர் நலக்கூடம்!
மக்களுக்கு, செயல்படாத உழைப்பாளர் நலக்கூடம்!

மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு,
மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு, தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் மிகப்பிரம்மாண்டமாக "உழைப்பாளர் நலக் கூடம்" திறக்கப்பட்டது. ஆனால், திறக்கப்பட்டும் திருச்சி அரிஸ்டோ பாலத்துக்கு கீழுள்ள உழைப்பாளர் நல கூடாரம்  சில நாட்களாக  பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடப்பது  மிகுந்த கவலையை அளிக்கிக்கிறது.
 பயன்பாடு யாருக்கு? உழைப்பாளர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மையம், இப்படி அவர்களுக்கு பயன்படாமல் இருப்பதற்கு மாநகராட்சியின் மெத்தனப் போக்கா அல்லது பராமரிப்புப் பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வா?
 நிர்வாகத்தின் பதில் என்ன? தொழிலாளர் சங்கங்களும், சம்பந்தப்பட்ட வார்டின் அதிகாரிகளும் இந்த மையம் மூடிக்கிடப்பது குறித்து இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?
 மக்கள் பணம் வீணாவதா? அரசு ஒரு திட்டத்தைத் தொடங்குவதோடு அதன் கடமை முடிந்துவிடுவதில்லை. அது மக்களைச் சென்றடைகிறதா என்பதைக் கண்காணிப்பதே நல்லாட்சிக்கு அடையாளம்.
 இந்த உழைப்பாளர் நலக்கூடத்தை உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து, அங்குள்ள வசதிகள் தொழிலாளர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.எந்தக் காரணத்திற்காக இது இத்தனை நாட்களாக பூட்டிக் கிடந்தது என்பது குறித்து தமிழக முதலமைச்சர்  கவனத்திற்கும், மாநகராட்சி ஆணையருக்கும் கொண்டு செல்லப்பட்டு உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
 இது வெறும் கட்டிடமாக மட்டும் இல்லாமல், இங்கு தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை பதிவு, நலத்திட்ட உதவிகள் மற்றும் ஓய்வறைகள் முறையாகச் செயல்படுவதைக் கண்காணிக்க   வேண்டும்.
உழைப்பாளர் நலமே நாட்டின் பலம்!"
என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் செயல்படும் இந்த அரசு, இந்தப் புகாரை உடனடியாகக் கவனித்து, இந்த நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்க வேண்டும் என்று உழைப்பாளர்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். இந்த கோரிக்கையை ஏற்று உழைப்பாளர் நலக்கூடத்தை பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்படுமா என்று காத்திருந்து இதனை பார்க்கலாம்