லால்குடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினரால் ஆவணம் இன்றி கொண்டு வந்த 4.70 லட்சம் பறிமுதல்...
திருச்சி மாவட்டம் லால்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் அரங்கநாதன் காவலர்கள் சிவகுமார், கார்த்திக், வெண்மதி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆண்டணி விகாஸ் என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 4.70 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ஸ்ரீதர் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0