ஐபாவுஸ் அமைப்பு மற்றும் ப்ரோஜோன் வணிக வளாகம், இணைந்து நடத்தும் கோவையில் மாபெரும் பெட் கார்னிவல் நிகழ்ச்சி...

கோவை

May 25, 2026 - 13:22
 0  25
ஐபாவுஸ் அமைப்பு மற்றும் ப்ரோஜோன் வணிக வளாகம், இணைந்து நடத்தும் கோவையில் மாபெரும் பெட் கார்னிவல் நிகழ்ச்சி...
ஐபாவுஸ் அமைப்பு மற்றும் ப்ரோஜோன் வணிக வளாகம், இணைந்து நடத்தும் கோவையில் மாபெரும் பெட் கார்னிவல் நிகழ்ச்சி...

கோவையில் மாபெரும் பெட் கார்னிவல் நிகழ்ச்சி ப்ரோஜோன் வணிக வளாகத்தில் மே மாதம் 23 மற்றும் 24ம் தேதி என ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது கோவை சரவணம்பட்டி பகுதியில் ப்ரோஜோன் வணிக வளாகம் இயங்கி வருகின்றது. இந்த வணிக வளாகத்தில் கோவையில் மாபெரும் பெட் கார்னிவல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை, பெங்களூரு மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 100 - க்கும் மேற்பட்ட பலதரபட்ட நாய்களின் கண்காட்சி, பேஷன் ஷோ மேலும் பூனைகள் கண்காட்சி, பறவைகள் கண்காட்சி, வண்ண வண்ண மீன்கள் கண்காட்சி, பல தரப்பட்ட மாடு, ஆடுகள், ஒட்டகம், குதிரைகள் கலந்து கொண்டது இது பார்வையாளர்களை வெகுவாக கலந்து கொண்டது. இது குழந்தைகளிடமும், கோவை மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் லைப் கேர் பெட் குழுவினரின் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சிக்கு அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து ஷீமேக்ஸ் கே 9, குழுவினரின் நாய்கள் சாகச நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
மேலும் எஸ்பிசிஏ மூலம் பெட் அசோசியேஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு  நடைபெற்ற இந்த மாபெரும் பெட் கார்னிவல், பலதரப்பட்ட குழந்தைகளை கவரும் வண்ண விளையாட்டுகள் , பேஷன் ஷோ என கோவை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாக, ஐபாவுஸ் அமைப்பின் நிறுவனர் உமா மகேஷ்வரன் மற்றும் அவரது குழுவினர் மற்றும் ப்ரோஜோன் வணிக வளாக நிர்வாகத்தின்  தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0