கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு பூமியை பாதுகாப்போம் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு...

புதுக்கோட்டை

Jun 5, 2026 - 15:30
 0  13
கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு பூமியை பாதுகாப்போம் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு...


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார், கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன்பேசினார். வட்டார கல்வி அலுவலர் மெகராஜ் பானு , ஊராட்சி மன்ற அலுவலக தட்டச்சர் மீரா மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும்பொழுது உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5 அன்று கொண்டாடப்படுகிறது. இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையால் 1973-ல் தொடங்கப்பட்டது. பூமியைக் காக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இத்தினம் வலியுறுத்துகிறது.இன்றைய காலகட்டத்தில் அதிவேக நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் காரணமாக புவி வெப்பமயமாதல், காடழிப்பு, பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் தீவிர பருவநிலை மாற்றங்கள் போன்ற பேராபத்துக்களை உலகம் எதிர்கொள்கிறது. இந்த பிரச்சினைகளைத் தடுத்து, எதிர்கால சந்ததியினருக்கு தூய்மையான மற்றும் பசுமையான பூமியை விட்டுச்செல்ல வேண்டியதன் அவசியத்தை இந்த நாள் நமக்கு வலியுறுத்துகிறது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் சில முக்கியமான பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
எளிதில் மக்காத ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக துணிப் பைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.மழைநீர் சேகரிப்பு முறைகளைப் பின்பற்றுவது, நீரை வீணாக்காமல் பாதுகாப்பது முடியும். 2026 ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தினத்தின்  கருப்பொருள்  இயற்கையால் ஈர்க்கப்பட்டது. காலநிலைக்கு. நமது எதிர்காலத்திற்காக"  என்பதாகும் என்று பேசினார் ‌. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் நிவின், வெள்ளைச்சாமி, செல்வி ஜாய், ஜென்ம ராகினி சகாய கில்டா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி மலர்கொடி, பஞ்சவர்ணம் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0