திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநில தலைவர் சிக்கந்தர் ஆதரவு...

திருச்சி

Apr 6, 2026 - 14:23
 0  11
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநில தலைவர் சிக்கந்தர் ஆதரவு...

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுகவுக்கு வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் வெல்ஃபேர் கட்சியின் மாநில தலைவர் S.N. சிக்கந்தர் கூறும்போது,
பாசிசம் ஒழிக்கப்பட வேண்டும் ஜனநாயகம் பேணப்பட வேண்டும் சிறுபான்மையினர் உரிமைகள் காக்கப்பட வேண்டும். வெறுப்பு பிரச்சாரங்கள் முறியடிக்கப்பட்டு சமூக நல்லுறவு வளர்க்கப்பட வேண்டும். மாநில உரிமைகளை முற்படுத்துதல், பாசிச எதிர்ப்பு, எல்லோருக்கு மான வளர்ச்சியை உறுதி செய்தல், கல்வித்துறையில் முன்னேற்றம், பெண்கள் மேம்பாடு, விளிம்பு நிலை மக்கள் எளிய மக்கள் உயர்கல்வி பெறுவதற்கான பாதைகளை அமைத்தல் போன்ற அடிப்படையான விசயங்களை நாம் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பாசிச சக்திகளின் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் சிறுபான்மையினர் உரிமைகள் காக்கப்படுவதில் பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதை நாம் எல்லோரும் அறிவோம். இப்படிப்பட்ட நல்லாட்சி தமிழகத்தில் மீண்டும் அமைய வேண்டும். வடநாட்டில் கிறிஸ்தவர்கள் தலித்கள் முஸ்லிம்கள் ஆகியோர் தொடர்ந்து துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படு கின்றன. வாழ்விடங்கள் தகர்க்கப்படுகின்றன . கடைகள் தீ வைத்து கொளுத்தப்படு கின்றன. எதிர்த்துப் போராட்டம் நடத்தினால் அக்கிரமமான முறையிலே கைது செய்யப்பட்டு கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இத்தகைய விபரீதமான நிலை தமிழகத்திற்கு வராமல் இருக்க வேண்டுமானால் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
கவர்ச்சிகளுக்கு மயங்காமல் போலி வாக்குறுதிகளை புறக்கணித்து ஓட்டளிக்கும் கடமைகளை முறையாக அனைவரும் செய்ய வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று கூறினார். அப்போது, ஊடக துறை பொறுப்பாளர் நவாஸ்கான், திருச்சி மாவட்ட தலைவர் முஹம்மது யாசீன், செயலாளர் அக்பர், Jih செயலாளர் பேராசிரியர் கமால், முன்னாள் தலைவர் சிராஜ், மற்றும் நிர்வாகிகள் ரபீக் சாகுல் ஆகியோர் உடன் இருந்தனர்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0