திருச்சியில் காவல்துறை அதிரடி அணிவகுப்பு - பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு!

திருச்சி

Apr 20, 2026 - 11:13
 0  5
திருச்சியில் காவல்துறை அதிரடி அணிவகுப்பு - பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு!
திருச்சியில் காவல்துறை அதிரடி அணிவகுப்பு - பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு!
திருச்சியில் காவல்துறை அதிரடி அணிவகுப்பு - பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு!

தமிழக சட்டசபை தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திருச்சி மாநகர பகுதிகளில் தேர்தல் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் காவல்துறை சார்பில் பிரம்மாண்ட பாதுகாப்பு அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. எம்.எம். நகர், உய்யகொண்டான் திருமலையில் தொடங்கி ரெட்ட வாய்க்கால், வயலூர் சாலை முடிவடைந்தது. இந்த அணிவகுப்பானது உதவி ஆணையர் திரு. பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது இந்த அணிவகுப்பினை கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.  அரசு மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் முன்னிலையில், சுமார் 150-க்கும் மேற்பட்ட சீருடைப் பணியாளர்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். இந்த காவல் துறை அணிவகுப்பின் நோக்கம் என்னவென்றால் தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றவும், சமூக விரோதச் செயல்களைத் தடுக்க காவல்துறை தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தப்பட்டது.சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் எல்லைக்குள் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்தவும்  இந்த அணிவகுப்பு  திட்டமிட்டு நடத்தப்பட்டது  என்று காவல்துறையினர் கூறினார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0