திருச்சியில் குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் இலவச ஸ்டோமா கிட் வழங்கும் நிகழ்ச்சி....
திருச்சி
திருச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் டெல்டா கேன்சர் ஃபவுண்டேஷன் இணைந்து, மலக்குடல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்காக நடத்திய 'ஸ்டோமா பராமரிப்பு விழிப்புணர்வு மற்றும் கிட் வழங்கும் விழா' திருச்சி ராமகிருஷ்ண மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருச்சி ராயல் லயன்ஸ் சங்கம் மற்றும் கொலோபிளாஸ்ட் (Coloplast) நிறுவனம் கலந்து கொண்டனார்.
ஸ்டோமா மற்றும்கொலோஸ்டமி: மருத்துவக் குழுவினர் இது குறித்து விளக்குகையில், "உடலின் இயல்பான கழிவுப் பாதை செயல்படாத நிலையில், அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் உருவாக்கப்படும் ஒரு செயற்கை திறப்புதான் 'ஸ்டோமா'. இதில் பெருங்குடலின் ஒரு பகுதியை வயிற்றின் வெளிப்புறத்திற்குக் கொண்டு வந்து மலம் வெளியேற மாற்று வழியாக அமைக்கப்படும் முறையே 'கொலோஸ்டமி' என்று அழைக்கப்படுகிறது," எனத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் டாக்டர் விஜய் ஆனந்த் முன்னிலை வகித்தார்,டாக்டர் கிருபா ராஜேஸ்வரி, டாக்டர் சுபாஷ் மேத்தா,டாக்டர் விஜய் கணேசன்,உணவு ஆலோசகர் கயல்விழி,ராயல் லயன் சங்க மாவட்ட தலைவர் முகமது ஷபி, லயன் பிரசன்னா வெங்கடேசன்,லயன் சரவணன் செயலாளர் ,லயன் முகமது உமர் கத்தாப்
coloplest நிறுவனத்தின் மேலாளர் விஜயபிராகஷ் சுதனையாண்டி,டெரிட்டரி மேனேஜர் மாடப்பன் வெள்ளையப்பன் மற்றும் கேர் ஸ்பெஷலிஸ்ட் முத்து முனியாண்டி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலந்துரையாடி சிறப்பித்தனர்
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் விஜய் ஆனந்த் பேசுகையில்,
ஸ்டோமா பகுதியைச் சுகாதாரமாகப் பராமரிக்கும் முறைகள் மற்றும் நோயாளிகள் உட்கொள்ள வேண்டிய சத்தான உணவு முறைகள் குறித்தும்,நோயைத் தைரியமாக எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பத்தையும் தெளிவாக விளக்கம் அளித்தார்.நோயாளிகளின் மன அழுத்தத்தைப் போக்கப் பிரத்யேக சிகிச்சைகளும், மனரீதியான வகுப்புகளும் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.நோயாளிகள் தங்கள் சந்தேகங்களை மருத்துவர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெளிவுபெற பிரத்யேக வாட்ஸ்அப் (WhatsApp) குழு தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
வரும் காலங்களில் மாதம் ஒருமுறை நோயாளிகளுக்கு இலவச 'கோலோஸ்டமி கிட்' வழங்கப்படும்.டெல்டா கேன்சர் ஃபவுண்டேஷன் மூலமாக ஏழை எளிய மக்களுக்குத் தொடர்ந்து இலவச புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அறுவை சிகிச்சைகளுக்குப் மருத்துவ உதவிகளும் ஆலோசனைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்று திருச்சி ராமகிருஷ்ணா மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் விஜய் ஆனந்த் கூறினார்.
இந்தச் சேவையில் முக்கியப் பங்காற்றிய திருச்சி ராயல் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பேசுகையில், "இந்தக் கோலோஸ்டமி கிட் வழங்கும் விழாவில் ஒரு அங்கமாக இருப்பது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தகைய சேவைகள் செய்வது மனதிற்குத் திருப்தியையும், எங்கள் இயக்கத்திற்குப் பெருமையையும் தருகிறது. இதனைத் தொடர்ந்து நாங்கள் அர்ப்பணிப்புடன் செய்வோம்," என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
நிறைவு மற்றும் கலந்துரையாடல்: நிகழ்ச்சியின் இறுதியில் மருத்துவர்களும் நோயாளிகளும் நேரடியாகக் கலந்துரையாடினர். இந்த உரையாடல் நோயாளிகளிடையே இருந்த பயத்தைப் போக்கி, பெரும் நம்பிக்கையையும் தைரியத்தையும் ஏற்படுத்தியது. இந்தச் சேவையில் பெரும் பங்களிப்பை வழங்கிய திருச்சி ராயல் லயன்ஸ் சங்கம் மற்றும் கொலோபிளாஸ்ட் நிறுவனத்திற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாக நிர்வாகத்தலைவர் டாக்டர் விஜய் ஆனந்த் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த மருத்துவ சேவைகளை பல்வேறு தரப்பினர் இதற்கு பாராட்டியும் ஆதரித்தும் , தொடர்ந்து இந்த சேவைகளை செய்யுமாறு என்பதை கேட்டுக் கொண்டுள்ளார்கள்
What's Your Reaction?
Like
3
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
1