பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்து சேனா தேசிய பேரியக்கம் ஆதரவு...

தமிழ்நாடு

Apr 18, 2026 - 10:16
 0  11
பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்து சேனா தேசிய பேரியக்கம் ஆதரவு...

தமிழகத்தில் வருகின்ற 2026-சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜ.க.விற்கு புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு சமூக நலப்பணிகளை மிக சிறப்பாக செய்து கொண்டிருக்கும் இந்து சேனா தேசிய பேரியக்கம் புதுடெல்லி தலைமையின் ஆலோசனையின் படியும் மற்றும் மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படியும் தமிழக பா.ஜ.கவின் தலைமை அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அவர்களிடம் முழு ஆதரவு தெரிவித்து ஆதரவு கடிதத்தை இந்து சேனா மாநில தலைவர் அருள்வேலன் ஜி தலைமையில் வழங்கினர்.இந்து சேனா தேசிய பேரியக்கத்தின் மாநில தலைவர் அருள்வேலன் ஜி பேசிய போது பாரத பிரதமர் மோடி ஜி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான சிறப்பு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மேலும் மத்திய அரசு தமிழகத்தின் மக்களின் தேவைகள் அறிந்து பல திட்டங்களை செயல்படுத்தி தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.அதோடு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கு நமது இந்தியா ஒரு வழிகாட்டியாகவும் மற்றும் அனைத்து துறைகளிலும் பெரும் முன்னேற்றத்தை நோக்கி சிறப்பாக முன்னேறி வருகிறது.எனவே தேசிய ஜனநாயக கூட்டணியான பா.ஜ.கவிற்கு ஆதரவை தெரிவித்ததோடு அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கும் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் எங்களது இந்து சேனா தேசிய இயக்கத்தின் பொறுப்பாளர்கள் பல்வேறு வகையான களப்பணியாற்றி தேசிய ஜனநாயக கூட்டணியை சார்ந்த அனைத்து வெற்றி வேட்பாளர்களை மாபெரும் வெற்றி பெற செய்வோம் என தெரிவித்தார்.இந்த நிகழ்வில் மாநில செயலாளர் கோவை செந்தில்குமார், சென்னை மாவட்ட தலைவர் பழனிவேல் , வேலூர் மாவட்ட தலைவர் ஆனந்தன் , சென்னை தீனதயாளன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0