வள்ளுவர்புரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் மண்டல பூஜையையொட்டி அரசு பள்ளியில் விளையாட்டு போட்டி

வள்ளுவர்புரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் மண்டல பூஜையையொட்டி அரசு பள்ளியில் விளையாட்டு போட்டி

Jan 7, 2025 - 19:56
Jan 7, 2025 - 19:57
 0  31
வள்ளுவர்புரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் மண்டல பூஜையையொட்டி அரசு பள்ளியில் விளையாட்டு போட்டி
வள்ளுவர்புரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் மண்டல பூஜையையொட்டி அரசு பள்ளியில் விளையாட்டு போட்டி
வள்ளுவர்புரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் மண்டல பூஜையையொட்டி அரசு பள்ளியில் விளையாட்டு போட்டி

 கிருஷ்ணகிரி:

வள்ளுவர்புரம் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் 48ம் நாள் மண்டல பூஜையையொட்டி அரசு பள்ளியில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வள்ளுவர்புரம் கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் வருகின்ற 21ம் தேதி 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெறுகிறது. இதையொட்டி வள்ளுவர்புரம் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, திருக்குறள் ஒப்பிவித்தல் போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கோணிப்பை ஓட்டப்பட்டி, பலூன் ஊதும் போட்டி, பேப்பர் கப்பை வைத்து கோபுரம் அமைக்கும் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு 48ம் நாள் மண்டல பூஜை நடைபெறும் தினத்தன்று பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி தலைமையில் ஆசிரியர்கள் ரோஸ்லின் சகாயமேரி, சுரேஷ், ஜெயபாரத், பவுலின்ஷர்மிளா, சென்னையன், சித்ராகுயில், சவித்ரா உள்ளிட்ட ஆசிரியர்கள் போட்டிகளை நடத்தினர். 

இந்த போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow