வள்ளுவர்புரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் மண்டல பூஜை.

வள்ளுவர்புரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் மண்டல பூஜை...

Jan 5, 2025 - 14:57
 0  118
வள்ளுவர்புரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் மண்டல  பூஜை.

வள்ளுவர்புரம் கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் 48ம் நாள் மண்டல பூஜையை முன்னிட்டு மரக்கன்றுகளுடன் அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வள்ளுவர்புரம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் வருகின்ற 21ம் தேதி 48ம் நாள் மண்டல பூஜை நடைபெறுகிறது. மண்டல பூஜையையொட்டி மண்டல பூஜைக்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி வள்ளுவர்புரம் கிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மகாராஜாகடை இன்ஸ்பெக்டர் தேவி, வனச்சரக அலுவலர் முனியப்பன், ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீடுதோறும் மரக்கன்று என்ற அடிப்படையில் அழைப்பிதழுடன் மரக்கன்றையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பெலவர்த்தி பஞ்சாயத்து தலைவர் சாந்திதேவராஜ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சின்னண்ணன், முருகன், சுகுணா, ராஜா, பலராமன், மயில்வேலன் செல்வகுமார், பாபு என்கின்ற பிரபுவேல், சிகாமணி, வடிவேல், செம்மண் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow