அரிமளத்தில் ஐகோர்ட் வல்லுநர் குழுவினர் தைலமரக்காடுகளை பார்வையிட்டு மக்கள் கருத்துக்களை கேட்டறிந்தனர்...

அரிமளத்தில் ஐகோர்ட் வல்லுநர் குழுவினர் தைலமரக்காடுகளை பார்வையிட்டு மக்கள் கருத்துக்களை கேட்டறிந்தனர்...

Jan 7, 2025 - 18:56
 0  22
அரிமளத்தில் ஐகோர்ட் வல்லுநர் குழுவினர் தைலமரக்காடுகளை பார்வையிட்டு மக்கள் கருத்துக்களை கேட்டறிந்தனர்...

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் யூகலிப்டஸ் மரங்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மதுரை ஐகோர்ட் அமைத்த வல்லுநர் குழுவினர் பதிவாளர் தமிழ்வேந்தன் தலைமையில் நேற்று அரிமளம் வனப்பகுதிகள் , பொற்குடான் குளம் , வனத்தில் அமைக்கப்பட்ட தடுப்பணைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். முன்னதாக ஓனாங்குடி ,செங்கீரை சென்றனர். அங்கிருந்த அரிமளம் , செங்கீரை சரக பகுதிமக்கள் , விவசாயிகள் ஆகியோரிடம் தைலமரக்காடுகளால் ஏற்படும் பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.

கிராம மக்கள்,பசுமை மீட்புக் குழுவினர்,கம்யூ. கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் வந்து வல்லுநர் குழுவிடம், இனி எங்கள் பகுதியில் தைலமரக்கன்றுகள் நடக்கூடாது. நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. மண்வளம் பாதிக்கிறது. வனப்பகுதியில் பெரிய பாத்திகள் அமைப்பதால் நீர்நிலைகளுக்கு மழைநீர் வருவது தடைபடுகிறது. மற்றபடி முந்திரி,நாவல்,வேம்பு,செம்மரம்,போன்ற கன்றுகளை நட யோசனை கூறினர்.இதையடுத்து வல்லுநர் குழுவினர் குரும்பூர் சென்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow