சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுவதால் பல விழிப்புணர்வு நிகழ்வு காவல் துறை சார்பில் நடைபெறுகிறது...
சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுவதால் பல விழிப்புணர்வு நிகழ்வு காவல் துறை சார்பில் நடைபெறுகிறது...

மதுரை:
சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுவதையொட்டி மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி போக்குவரத்து காவல்துறை சார்பில் பல விழிப்புணர்வு நிகழ்வுகளும் விபத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மதிச்சியம் போக்குவரத்து நிலையை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வக்பு வாரிய கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து மாணவர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் கலந்து கொண்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
இது கல்லூரி வளாகத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அண்ணா பேருந்து நிலையம் ஆவின் சந்திப்பு வழியாக மீண்டும் கல்லூரியில் நினைவு பெற்றது இந்நிகழ்ச்சியில் தல்லாகுளம் போக்குவரத்து உதவியாளர் திரு இளமாறன் மற்றும் கல்லூரி முதல்வர் கொடியசைத்து நடை பயணத்தை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் மாட்டுத்தாவணி போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ் மதிச்சியம் போக்குவரத்து ஆய்வாளர் ஷோபனா சார்பு ஆய்வாளர் விஸ்வநாதன், கல்லூரி பேராசிரியர் யசோதா, போக்குவரத்து காவலர்கள் மற்றும்150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






