சாலைகளில் குப்பைகளை எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார்...!!
சாலைகளில் குப்பைகளை எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார்...!!
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி எதிர்புறம் அமைந்துள்ள கண்ணன் நகர் 6வது தெருவில் சாலையிலேயே குப்பைகளை எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி எதிர்புறம் கண்ணன் நகர் அமைந்துள்ளது. இங்கு ஏராளமாக குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதியில்தான் கலெக்டர் முகாம் அலுவலகமும் அமைந்துள்ளது. மருத்துவமனை, கல்லூரி, திருமண மண்டபம், அரசு அலுவலகங்கள் என்று இப்பகுதியை சுற்றி அமைந்துள்ளது. இந்த கண்ணன் நகர் அருகில் மாநகராட்சியின் குப்பைகளை தரம் பிரித்து நுண்ணுயிர் தயாரிக்கும் குப்பைக்கிடங்கும் அமைந்துள்ளது. இந்நிலையில் கண்ணன் நகர் 6ம் நகரில் சாலையிலேயே குப்பைகளை கொட்டி தீவைத்து கொளுத்துகின்றனர்.
பிளாஸ்டிக் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட பல்வேறு குப்பைகளும் சாலையிலேயே தீவைத்து எரித்துள்ளனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து விட்டுள்ளதால் இங்கு வசிக்கும் குழந்தைகள், முதியவர்களுக்கு சுவாச பிரச்னை ஏற்படுகிறது.
இப்படி குப்பைகளை தீவைத்து எரிப்பதால் காற்று வேகமாக வீசும் போது தீப்பொறிகள் பறந்து மின் ஒயர்களில் படும் நிலை உள்ளது.
எனவே இதுபோன்று குப்பைகளை எரிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்றும் கண்ணன் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?






