எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்கே ஃபைஸி டெல்லியில் கைது..!! எஸ்டிபிஐ கட்சி வடக்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்...

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்கே ஃபைஸி டெல்லியில் கைது..!! எஸ்டிபிஐ கட்சி வடக்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்...

Mar 5, 2025 - 16:33
 0  3
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்கே ஃபைஸி டெல்லியில் கைது..!!  எஸ்டிபிஐ கட்சி வடக்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்...
மதுரை:
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே. ஃபைஸி அவர்கள் கடந்த மூன்றாம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் வடக்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் பிலால்தீன் தலைமை தாங்கினார் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் கூறியதாவது:
கடந்த 3ஆம் தேதி எங்களுடைய தேசிய தலைவர் எம் கே ஃபைஸி டெல்லியில் எந்த விதமான முன் அறிவிப்பு இன்றி  அமலாக்கத்துறை கைது செய்துள்ளனர் ஒருவரை கைது செய்வதற்கு முன்பாக அவரை எந்த காரணத்துக்காக கைது செய்கிறோம் என்பதை விளக்க வேண்டும் அல்லது முன்கூட்டியே சம்மன் வழங்கியிருக்க வேண்டும் இப்படி இருக்கும் சூழ்நிலையில் எந்தவித அறிவிப்பு இன்றி 21 மாநிலங்களில் பல்வேறு தரப்பு மக்களுக்காகவும் சிறுபான்மை மக்களுக்காகவும் பல்வேறு உரிமை போராட்டங்கள் நடத்தி வரும் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் ஃபைஸி அவர்களை ஒன்றிய அரசு அமலாக்க துறையை பயன்படுத்தி கைது செய்துள்ளது இந்த செயல் கண்டிக்கத்தக்கது இது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். மேலும் அரசியல் தலைவர்களை பழிவாங்கும் நோக்கில் ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது இதற்கு ஒருபோதும் எஸ்டிபிஐ கட்சியினர் அச்சப்பட மாட்டார்கள் மேலும் எங்களுடைய மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை என்றென்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்தார் மேலும் தேசியத் தலைவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow