பொங்கல் தொகுப்புடன் ரூ. 1000 வழங்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம்: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி உதயகுமார் பேச்சு
பொங்கல் தொகுப்புடன் ரூ. 1000 வழங்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம்: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி உதயகுமார் பேச்சு

பொங்கல் தொகுப்புடன் ரூ. 1000 வழங்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் : திருச்சி ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேச்சு
ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மாரிஸ் மற்றும் ஜங்ஷன் பாலப்பணிகளை விரைந்து முடிக்க கோரியும், திருச்சி மக்களுக்கு வரிகளை விதித்து வரும் மாநகராட்சியை கண்டித்தும் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் திருச்சி மாநகர், மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்து பேசியதாவது:- திருச்சி மாநகரில் மெயின் கார்டு கேட், சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள் உள்ளது. உறையூர் பகுதியில் இருந்து வரும் மாணவர்களை இந்த மாரிஸ் மேம்பாலத்தை தான் பயன்படுத்தி வந்தனர். தற்பொழுது இந்த பாலப்பணி நடைபெறாமல் இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. இதே போல ஜங்ஷன் மேம்பாலமும் பணிகள் துரிதமாக நடைபெறாமல் இருக்கிறது. மக்களுக்கு வரி மேல் வரி விதித்தும், அந்த வரிக்கு வட்டி போடும் திமுக அரசை அகற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமை தாங்கி
பேசியதாவது, தமிழக முதலமைச்சர் கன்னியாகுமரியில் பேசும்பொழுது இந்த அரசு எவ்வளவு சிரமப்பட்டு நடக்கிறது தெரியுமா? மத்திய அரசு இதனை தடுத்து வருகிறது. என்று தன்னுடைய இயலாமையை முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புக்கொண்டு பேசி உள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசுக்கு நீதிமன்றம் எப்படிப்பட்ட கண்டனத்தை எல்லாம் தெரிவித்தது என்று நம் அனைவருக்கும் தெரியும்.
அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த இலவச மடிக்கணினி திட்டம், குடி பராமரித்து பணி, தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. அதிமுக ஆட்சியில் பல்வேறு நெருக்கடி காலத்திலும் பொங்கல் பரிசு தொகுப்பு தொகை வழங்கப்பட்டு வந்தது. கொரேனா காலத்தில் கூட முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களுக்கு வழங்கினார். ஆனால் இந்த முறை திமுக அரசு பொங்கல் பரிசு தொகை வழங்காமல் இருக்கிறது. பொங்கல் பரிசுத் தொகை ஆயிரம் ரூபாயை பொங்கல் தொகுப்புடன் வழங்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அனுமதி பெற்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டார்கள். முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியை கொண்டு வர பொதுமக்கள் தயாராகிவிட்டனர் இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் பேசினார். ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் மாநகராட்சி நிர்வாகத்தையும், தமிழக அரசையும் கண்டித்து அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பினர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
What's Your Reaction?






