அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேய சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வட மாலை சாற்றுதல் வைபவம் நடைபெற்றது
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேய சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வட மாலை சாற்றுதல் வைபவம் நடைபெற்றது

திருச்சி கல்லுகுழி ஆஞ்சநேய சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டும் உலக நன்மைக்காகவும் ஆஞ்சநேயர் சாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடமாலை சாற்றுதல் மற்றும் 10 ஆயிரத்து எட்டு ஜாங்கிரி மாலை சாற்றுதல் வைபவம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு ஏழு மணி அளவில் வடமாலை மற்றும் ஜாங்கிரி மாலை சாற்றும் வைபவம் நடைபெற்றது.
நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கோவிலில் வழங்கப்பட்ட பிரசாத பைகளை வாங்கிச் சென்றனர்.
இவ்விழாவிற்காக கோவில் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்திருந்தனர்.
What's Your Reaction?






