பதவிக்காலம் நிறைவுற்றதை முன்னிட்டு அனைவருக்கும் விருந்தளித்து பிரிவு உபசாரம் செய்த ஊராட்சி மன்ற தலைவர்...

பதவிக்காலம் நிறைவுற்றதை முன்னிட்டு அனைவருக்கும் விருந்தளித்து பிரிவு உபசாரம் செய்த ஊராட்சி மன்ற தலைவர்...

Jan 6, 2025 - 15:34
Jan 6, 2025 - 15:36
 0  43
பதவிக்காலம் நிறைவுற்றதை முன்னிட்டு அனைவருக்கும் விருந்தளித்து பிரிவு உபசாரம் செய்த ஊராட்சி மன்ற தலைவர்...
பதவிக்காலம் நிறைவுற்றதை முன்னிட்டு அனைவருக்கும் விருந்தளித்து பிரிவு உபசாரம் செய்த ஊராட்சி மன்ற தலைவர்...
பதவிக்காலம் நிறைவுற்றதை முன்னிட்டு அனைவருக்கும் விருந்தளித்து பிரிவு உபசாரம் செய்த ஊராட்சி மன்ற தலைவர்...

திண்டுக்கல்:

பித்தளைப்பட்டி- ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காலம் நிறைவுற்றதை முன்னிட்டு அனைவருக்கும் விருந்தளித்து பிரிவு உபசாரம் செய்த ஊராட்சி மன்ற தலைவர்.     

       ‌          ‌                              

தமிழக ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிக்காலம் நிறைவுற்றதை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் பிரிவு உபசாரம் நடைபெற்ற நிலையில் அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பித்தளைப்பட்டி ஊராட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு அஇஅதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மயில்சாமி ஊராட்சி மன்ற தலைவர் அவருடைய பதவிக்காலம் நிறைவுற்றதை முன்னிட்டு

பொதுமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், தூய்மை காவலர்கள் அனைவரையும் அழைத்து விருந்து உபசாரம் செய்து அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றார். 

இதில் ஊராட்சி மன்ற தலைவரை அலுவலக பணியாளர்கள் தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக சந்தன மாலை அணிவித்தும் நினைவுக்கேடயம் வழங்கியும் பொன்னாடை போர்த்தி கௌரவப் படுத்தினார்கள் மேலும் அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர் பெருமக்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஊராட்சி மன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள் கூறியும் பிரியாவிடை பெற்று சென்றனர். இக்கூட்டத்தில்  கலந்து கொண்ட அனைவருக்கும் சைவ உணவுகள், அசைவ உணவுகள் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow