மாசி திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் கோவிலுக்கு 1008 பால்குடம் எடுத்து ஊர்லமாக வந்த பக்தர்கள்...
மாசி திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் கோவிலுக்கு 1008 பால்குடம் எடுத்து ஊர்லமாக வந்த பக்தர்கள்...

திண்டுக்கல்:
பழனி மாசி திருவிழா முன்னிட்டு மாரியம்மன் கோவிலுக்கு 1008 பால்குடம் எடுத்து ஊர்லமாக வந்து அபிஷேக செய்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். ஆண்டு தோறும் மாசி மாதம் மாரியம்மன் கோவிலுக்கு மாசித்திருவிழா விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது . மாசி திருவிழாவிற்காக வ.உ.சி. மன்றம் சார்பில் பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து காந்தி மார்க்கெட், கடைவீதி வழியாக ஊர்வலமாக சென்று மாரியம்மன் கோவிலை அடைந்தனர் . மாரியம்மன் கோவிலில் பால் அபிஷேகம் செய்த பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு அன்னாஅபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
What's Your Reaction?






